விஜயகாந்த் மரணம்.. அதற்குள் கொண்டாட்டத்திற்கு ரெடியான விஜய்!

லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும், தளபதி 68 படத்தில், நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள், வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது எக்ஸ் தளத்தில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தளபதி 68 படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனால், கேப்டன் விஜயகாந்த் இறந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், அதற்குள் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்களே என்று, ஒரு சில நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதனால், இது இப்படத்திற்கு நெகட்டிவ்வாகவும் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News