தெலங்கானாவில் ரயிலில் பயங்கர தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் காஜி பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்பெட்டிகள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் ஒரு ரயில் பெட்டியில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு வேகமாக பற்றி எரிய துவங்கியது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரயில் பெட்டியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

RELATED ARTICLES

Recent News