ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக, 20 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, பாலகிருஷ்ணா வாங்கியுள்ள சம்பளம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, 50 கோடி ரூபாயை, அவர் சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். இந்த தகவல், சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.