டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்பப் பெறும்போது நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி திருவள்ளூர் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான குடோனை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் டாஸ்மாக் குடோன் இயக்கி வருகிறது இந்த குடோனில் இருந்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 137 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வருகின்றனர்.
இந்த 137 டாஸ்மார்க் கடைகளில் சுமார் 1025 பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் இவர்களுக்கு ஏற்கனவே வேலை சுமை அதிகமாக உள்ளதால் நோய்வாய்ப்பட்டு பெரும்பாலான டாஸ்மார்க் பணியாளர்கள் அவதி உற்று வருவதுடன் சிலர் இறந்தும் போகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை பத்து ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கவும் பின்னர் காலி மது பாட்டல்களை திரும்ப பெற்றபின் பத்து ரூபாயை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது,
இதனை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி குழு அமைத்து பேச்சுவார்த்தை முடிந்தபின் தனியாருக்கு ஏலம் மூலம் காலி பாட்டில்களை வாங்கும் பணியை ஒப்படைத்து டாஸ்மார்க் பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தற்பொழுது 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் முதுநிலை சென்னை மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் தற்பொழுது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் இதன் காரணமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 137 டாஸ்மாக் கடைகளில் இன்று விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.