பழனி நெய்க்காரன்பட்டியை சேர்ந்த சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு பழனியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த 9ம் தேதி இவரது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டது உண்மையா என்பதை அறிய தனது நண்பருக்கு 21000 ரூபாய் அனுப்பினார். இதில் தனது அக்கவுண்டில் உண்மையிலேயே பணம் கிரெடிட் ஆனதை உறுதி செய்தார்.
பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாகவும் திருப்பித்தருமாறும் வங்கித் தரப்பில் இருந்து பேசப்பட்டது. மேலும் வங்கி தரப்பில் இருந்து ஓட்டுநர் ராஜ்குமாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஓட்டுநர் ராஜ்குமார் சென்னை கவால் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக செயல் அதிகாரியான எஸ் கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக எஸ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.