ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம். ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மருத்துவக் கல்லூரி முன்பு நடைபெற்றது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் 300-க்கும் மேற்பட்டோரை அலுவலக பணியாளர்களாக பணியிறக்கம் செய்து அயற்பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், அரசாணையின்படி தர ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜான் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

Recent News