தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருப்பவர் விஷால். சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர், இலவச திருமணங்கள் செய்து வைப்பது, காசிக்கு சென்று வந்தப்பின் மோடியின் ஆட்சியை புகழ்வது என தனது அரசியல் ஆர்வத்தை வெளிபடுத்தி வருகிறார்.

இந்த நிலையில் புரட்சித்தலைவர், பொன்மலச்செம்மல் என்று அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார். சட்டை கூட அணியாமல் நெஞ்சில் குத்தியுள்ள டாட்டூவை காட்டும்படி எடுத்த புகைப்படம், சமூக வலைதளத்தில் தீயாய் பரவிவருகிறது.