வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தற்போது 2K Kids-ன் வாழ்க்கையை மையமாக வைத்து, 2K Kids லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அறிமுக நடிகர்கள் ஜெகவீர், மீனாட்சி கோவிந்த ராஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், பல சரவணன், ஆண்டனி பாக்யராஜ், சிங்கமுத்து ஆகியோர், குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து, பின்னணி பணிகளை தொடங்குவதற்கு, இயக்குநர் தயார் ஆகி வருகிறார்.