சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரெட்ரோ. கடந்த மே 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
இருப்பினும், வசூலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 14 நாட்களில், 100 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் உலக அளவில் வசூலித்துள்ளதாம்.