மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “திமுக அரசு பதவியேற்றது முதல் 44 நீதிமன்றங்களை அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறை உள்கட்டமைப்புக்காக தொலைநோக்கு சிந்தனையுடன் திமுக அரசு செயல்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் தொடங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும்” என அவர் பேசினார்.