குடுப்பத்துடன் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை முயற்ச்சி…!!

இளநீர் கடையை அகற்றி கொலை மிரட்டல் விடுத்த சாயல்குடி பேரூராட்சி தலைவரை கண்டித்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி மகன் ஆகியோர் மண்ணெண்ணைய்யை ஊற்றி தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலைய பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த வேடன், காயாம்பு தம்பதி தள்ளுவண்டியில் இளநீர்கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த இளநீர்கடையை சாயல்குடி பேரூராட்சியினர் அகற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் பேரூராட்சி தலைவர் மாரியப்பனிடம் கடையை அகற்றியது குறித்து வேடனின் மகன் பரமசிவன் முறையிட்டபோது தகாதாக வார்த்தையில் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பேரூராட்சி தலைவர் மீது சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், புகாரை வாபஸ் பெற கோரி தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மனமுடைந்த இளநீர் வியாபாரி வேடன், மனைவி காயாம்பு, மகன் பரமசிவன் ஆகிய மூவரும் நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தி தீடீரென மண்ணெண்ணையை தங்களின் உடல் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை காப்பாற்றி கேணிக்க கை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்

RELATED ARTICLES

Recent News