பராசக்தி – ஜனநாயகன் மோதலா? – இயக்குநர் விளக்கம்!

துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்காரா. இந்த படத்திற்கு பிறகு, இறுதிச் சுற்று, சூரறைப் போற்று ஆகிய படங்களை இயக்கியிருந்தார். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்காரா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பராசக்தி படத்திற்கான படப்பிடிப்பு, இன்னும் 40 நாட்கள் மட்டும் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில், பராசக்தி படமும் ரிலீஸ் ஆகிறதா என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சுதா கொங்காரா, அவை அனைத்தும் வதந்தி என்றும், அப்படியொரு அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை என்றும் கூறி, விளக்கம் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News