திடீர் என்று உயர்ந்த சுங்கட்டணம். 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்வு…!!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குவது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் சுங்ககட்டணத்தை நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர்.

திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகித்து வருகின்றனர். நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது அதன்படி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கார், ஜீப், பயணிகள் சுங்ககட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாய் பல முறை பயணிக்க 155லிருந்து
160 ஆக உயர்த்தபட்டுள்ளது. கார் வேன் ஜீப்பிற்கு மாதாந்திர கட்டணம் 3100 லிருந்து 3,170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 180 லிருந்து 185 ஆகவும் மாதாந்திர கட்டணம் 5420 லிருந்து 5545 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக்குகள் பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 360 லிருந்து 370 ஆகவும் இருமுறை பயணிக்க 540 லிருந்து 555 ஆகவும் மாதாந்திர கட்டணம் 10,845 லிருந்து 11085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 580 லிருந்து 595 ஆகவும் இருமுறை பயணிக்க 870 லிருந்து 890 ரூபாயும் மாதாந்திர கட்டணம் 17425 லிருந்து 17820 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 ரூபாயிலிருந்து 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

RELATED ARTICLES

Recent News