50 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்த மாணவர்கள் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து நட்பை பரிமாறிக் கொண்டது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது
அரந்தாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இன்று மீண்டும் சந்தித்தனர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு அறந்தாங்கி அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் அன்பு கூடு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இன்று ஒன்று கூடினர்
ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் இந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு பொருட்களும் அத்துடன் ஊக்கத் தொகையும் வழங்கினார்
முதுமை அடைந்திருந்தாலும், பழைய நண்பர்களை கண்டவுடன் அனைவரும் குழந்தை மனநிலைக்கே திரும்பி, சிரிப்பும் கிண்டலும், நினைவுகளும் பரவின. பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்கள், ஆசிரியர்களின் கட்டுப்பாடுகள், விளையாட்டு மைதான நினைவுகள் என பல சுவையான அனுபவங்கள் மீண்டும் பகிரப்பட்டன.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், “இது எங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்றும் . பாதி நண்பர்கள் இன்று இல்லை என்பதால் வருத்தமுண்டு. ஆனால் இனி ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, நமது நட்பைத் தொடர்வோம்” என்று உறுதியளித்தனர்.
முழு மண்டபமும் சிரிப்பும் கண்ணீரும் கலந்த பாசத்தால் நிரம்பியது. 50 ஆண்டுகள் கழித்தும் மாணவர்கள் இன்னும் அதே பிள்ளைத்தனத்தோடு இருப்பதையே அனைவரும் உணர்ந்தனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கொருவர் சந்தித்த பொழுது அவர்களை அறியாமல் கை கொடுத்தும் கட்டி அனைத்தும் தங்களது நட்பை பரிமாறிக் கொண்டனர்
இது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது