மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று தொடர் வெற்றிப் படங்களை சிம்பு கொடுத்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து, கமலுடன் சேர்ந்து தக் லைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, பார்க்கிங் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்து இயக்க உள்ள படத்தில், சிம்பு தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் புதிய போஸ்டரை, படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது, ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. சிம்புவின் 49-வது படமாக அமைய உள்ள இதில், பொறியியல் கல்லூரி மாணவராக, அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.