கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகா போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
தமிழ் கல்ட்சுரல் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தமிழ் கல்ட்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி தலைமையில் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி உள்பட 18 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மகாத்மா காந்தி நடுநிலைப்பள்ளி, சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் பள்ளி, கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஆகியவை பெற்றன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சர்வதேச கடற்கரை கைப்பந்து நடுவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டி, ராமச்சந்திரன்,, ரோட்டரி சங்க செயலாளர் பழனி குமார் ஆகியோர் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில், உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்,தமிழ் கல்ட்சுரல் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணைத் தலைவர் , கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் செயலாளர் சூரிய நாராயணன், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.