சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்கிற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் மிமிக்கிரி கலைஞராகவும் இருந்து வந்துள்ளார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் கோவை குணா, மதுரை முத்துவுடன் இணைந்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோவை குணா உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.