ஒவ்வொரு ஆண்டு முடிந்து, புதிய ஆண்டு தொடங்கும்போது, நிறைவுற்ற ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், சுவாரசிய நிகழ்வுகளையும் நினைவு கூர்வது வழக்கம்.
அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய தகவல்களை, பிளின்கிட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட ஒரு தகவல் மட்டும், நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது, தெற்கு டெல்லி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், 2023-ஆம் ஆண்டில் மட்டும், 9 ஆயிரத்து 940 ஆணுறைகளை, ஆன்லைனில் வாங்கியுள்ளாராம். இதன்படி, பார்க்கும்போது, ஒரு நாளைக்கு அவர் சராசரியாக 27 ஆணுறைகளை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் தான், தங்களது அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் இணையத்தில் கொட்டி வருகின்றனர்.
இதேபோன்று, இன்னொரு நபர், வெறும் ஒரு நாளைக்கு மட்டும், 81 ஆணுறைகளை இணையத்தில் ஆர்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.