சூரியின் தைரியமான முடிவு.. பாராட்டிய வைரமுத்து!

சூரி ஹீரோவாக நடித்துள்ள மாமன் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் எனக் கூறி, அவரது ரசிகர்கள், மண்சோறு சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதனை அறிந்த நடிகர் சூரி, மேடையிலேயே தனது ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், இதுபோன்ற செயலை செய்பவர்கள், தனது ரசிகர்களாக இருப்பதற்கு தகுதி அற்றவர்கள் என்றும் கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு குறித்து, கவிஞர் வைரமுத்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடிப்படை பகுத்தறிவு இல்லாதவர்கள், தனது ரசிகர்களாக இருக்க முடியாது என்று கூறியதற்கு, நடிகர் சூரிக்கு துணிச்சல் வேண்டும் என்றும், பிற கதாநாயகர்களும், தங்களது ரசிகர்களை இவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்றும், கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News