தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் 2009 -ம் ஆண்டு வெளியான “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் பிரபலமானார்.
பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் காமெடியனாக நடித்து வந்த சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

விடுதலை படம் ஆரம்பிக்கும் போது சூரிக்கு 30 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் இப்படம் இரண்டு பாகங்களாக வருவதனால் சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்திவுள்ளார்களாம்.