கர்நாடகாவில் உள்ள மைசூர் பன்னிமண்டபப் பகுதியில் வசித்து வருபவர் அஸ்லாம். இவரது மகனான உமைஸ் மொபைல் போனிலேயே அதிகளவு நேரத்தை செலவு செய்து வந்துள்ளார்.
உமைஸ் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி வருவதை தந்தை அஸ்லாம் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்றும் இது தொடர்பாக இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து கோபத்தில் அஸ்லாம் திடீரென மகனை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த உமைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொபைல் போனுக்கு அடிமையான மகனை தந்தையே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.