பருத்திவீரன்’ படத்தில் இயக்குநர் அமீர் தயாரிப்பாளராகத் தன்னிடம் நிறைய பணம் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றை அளித்தாா். இதற்கு விளக்கம் கொடுத்த அமீர், தன் மீது தவறில்லை என்றார். அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பலரும் குரல் கொடுக்கும் நிலையில் இதுகுறித்து பாடலாசிரியரும் கவிஞருமான சிநேகன் ட்வீட் செய்துள்ளாா்.
அதில் அவா் கூறியுள்ளதாவது, நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. ’பருத்திவீரன்’ படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.