‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th 😊👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 22, 2023
வீரமே ஜெயம் 💪🔥#Maaveeran #Mahaveerudu#VeerameJeyam@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu… pic.twitter.com/TRzMmRrXHM