மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாரம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சுவாச நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பாராமரிப்பில் தீவிர சிகிச்சை பெற்ற வந்தார்.
இந்நிலையில், சீதாரம் யெச்சூரி தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
