உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்களை தாக்கிய நபரின் மீது புகார் அளித்தும் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்ளிருப்பு போராட்டம் நேற்று சாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் போது விஏஓகளான சாபுதீன் மற்றும் சின்ன பையன் என்ற இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களை வெங்கடாபதி என்னும் நபர் தாக்கி இருப்பதாகவும் மேலும் அவர் மீது புகார் அளித்தும் இதுவரை அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என தெரிவித்தும் உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதுமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த நபரை தாக்கியதாக பொய்யான தகவல் சில ஊடகங்களில் வெளியாகி வருவதை மறுப்பதாகவும் தெரிவித்து தொடர் உள்ளேற்பு போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்