கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன்.. நடிகர், இசையமைப்பாளர் என ஆல்ரவுண்டராக இருக்கும் இவர், பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளிவந்த பிரின்ஸ், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 43-வயதாகும் ப்ரேம்ஜி, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான கேள்விகளுக்கும், சரியான பதிலளிக்காமல் நழுவி விடுவார். இந்தநிலையில் பின்னணி பாடகியான வினைதா, பிரேம்ஜியை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் என் புருஷன் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நெட்டிசன்கள், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.