மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.