முடிவுக்கு வராத ரவிமோகன் ஆர்த்தி விவாகரத்து..! கெனிஷா ரவிமோகன் வைத்த ட்ரீட்..!!

நடிகர் ரவி மோகனும் கெனிஷாவும் சேர்ந்து வைத்த விருந்தில் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து விவகாரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரவி மோகன் அவரது தோழி கெனிஷாவுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறார். இவர்களின் நெருக்கம் அவர்களது விவாகரத்துக்கு காரணமாக இருக்குமோ என நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

அப்போது ரவி மோகன், விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை அது தொடர்பாக பேச வேண்டாம் என்றும், கெனிஷா தன்னுடைய சிறந்த தோழி என அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இதற்கிடையில் அவர் கெனிஷாவுடன் சேர்ந்து திருமண நிகழ்வுகளிலும் பங்கேற்றார்., ஒரு வேளை இருக்குமோ என., ரசிகர்கள் மீண்டும் கேள்வி எழுப்பும் அளவிற்கு இந்த செயல் அமைந்துள்ளது.

அதாவது கெனிஷாவின் பாடல்கள் கடந்த சில மாதங்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். சரி இதுல என்ன தப்பு இருக்குனு நீங்க நினைக்கலாம். இதற்கு முன்னும் இவரது பாடல்கள் ஹிட் கொடுத்த போதிலும் அவர் விருந்து வைக்காத நிலையில், இப்போது மட்டும் ஏன் ரவி மோகனுடன் சேர்ந்து விருந்து வைக்க காரணம் என்னவென்று ஆர்த்தியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விருந்தில் நடிகர் மாதவன், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் சுதா கொங்கரா, பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

RELATED ARTICLES

Recent News