பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு தலையில் பலத்த அடி – மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News