இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக கடந்த 25ம் தேதி இலங்கையில் காலமானார்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற நிலையில் சிகிச்சை பலன்றின்றி அங்கு காலமானார். அவரது உடல் நேற்று விமானம் மூலம் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.