இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவரது அதிரடியான ஆட்டத்துக்கு, உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாற்று கதையில் நடிப்பதற்கு, பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ஆர்வம் தெரிவித்துள்ளார். அதாவது, நடிகர் சிம்புவிடம், விராட் கோலி குறித்து, கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார். இவரது ஆசை நிறைவேறும் பட்சத்தில், இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக, இது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.