எடப்பாடியில் போதைப்பொருள் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் 250 மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றும் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது…
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் அருகேவுள்ள தனியார் பள்ளியில் இடசை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது…
அப்போது போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் இடைவிடாமல் 250 மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்…
மேலும் இந்த சாதனையானது நோபல் உலக சாதனை அங்கீகரித்து மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினர். ஒரே இடத்தில் மாணவ மாணவிகள் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நிகழ்ச்சி காண்போரை வியப்படையச் செய்தது…