ஷங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடிப்பில், கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில் மேன். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை, ஜென்டில் மேன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில், கே.டி.குஞ்சுமோன் தான் தயாரிக்க உள்ளார்.
மேலும், கோகுல் கிருஷ்ணா என்பவர் தான், இந்த படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஷீட்டிங் இன்று, சத்யா ஸ்டுடியோஸில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
கவிப்பேரரசு வைரமுத்து தான், இந்த படத்தின் ஷீட்டிங்கை, ஆக்ஷன் சொல்லி துவக்கி வைத்தார். முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்றே திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.