மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநில மாநாட்டில் மகளிருக்கு என தனி வாகனங்கள் ஏற்பாடு..!!

மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநில மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்டத்திலிருந்து செல்லும் 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவிற்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி தயார்

தஞ்சை த.வெ.க. மத்திய மாவட்டம் சார்பில் மதுரையில் நடைபெறுகிற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் இருந்து சுமார் 150 வாகனங்களில் 3 ஆயிரம் பேர் செல்கின்றனர், இதில்
மகளிருக்கு என தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவருக்கும் காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல் பரிமாறப்பட்டன.

மதிய உணவாக சுடச்சுட சிக்கன் பிரியாணி 3 ஆயிரம் பேருக்கு வழங்க தயாராகி வருகிறது, செல்லும்
வழியில் களைப்பு நீங்க பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது,
த.வெ.க. தொண்டர்கள் தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில் இருந்து வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளனர்

RELATED ARTICLES

Recent News