சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு நேற்று முடக்கப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News