சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடிய பள்ளி மாணவர்கள் !

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பள்ளி ஒன்றில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு மாணவ மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியை எல்இடி திரை மூலம் காட்சி படுத்தினார்.

அதில் சிறப்பு நேரலை மூலம் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டதை எல்இடி திரையில் கண்ட மாணவ மாணவிகள் இறுதி கௌண்டவுன்களை கைகளை தட்டி உற்சாகத்துடன் விண்ணில் சென்றதை கண்டு ரசித்தனர்.,

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மதன்பிரபு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

RELATED ARTICLES

Recent News