அதிமுக ஆட்சியில் இருந்த போது கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290 கோடி ரூபாய் மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முறைகேடு நடந்தாக அறப்போர் இயக்கமும், திமுகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. டெண்டர் முறைகேடு புகார் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் ஐந்து நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும் ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.