வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்! அவரும் மாட்டிக்கிட்டாரா ?

அலட்சியம் தவறான நிா்வாகம் தான் இதற்கு காரணம் என வெள்ளத்தில் பாதிப்பு அடைந்ததை பற்றியும் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்
இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன்.

அதன்படி , அவா் கூறியுள்ளதாவது, “10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இந்த ஆண்டு ஏற்கெனவே சில புதிய மைல்கல்கள் நிகழ்ந்துள்ளன. வேடிக்கை என்னவென்றால், இது வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற எந்தப் பகுதியையும் விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியவை ஒரே பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழி வகுத்துள்ளது.

அது ஒவ்வொரு முறையும் எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது. இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களை சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்பு பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.

இவாின் இத்தகைய பதிவிற்கு பலரும் இவருக்கும் இந்த நிலமையா என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News