30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

RELATED ARTICLES

Recent News