சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்..!!

சென்னை காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய சங்கர் ஜிவால், தமிழ்நாடு டிஜிபியாக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1992ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் பரமக்குடி மற்றும் நாகர்கோவிலில் ஏஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.யாகவும், அதன் பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பதவி வகித்தார்.

1998ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அப்போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்தார்.

2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்தபோது அதிகப்படியான இளைஞர்களை காவல் துறையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தற்போது சென்னை காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News