இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ பிரபல நட்சத்திரம் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தை உலக தரத்தில் உருவாக்க பிரசாந்த் நீல் முயற்சித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, ‘சலார்’ படத்தின் சண்டைக் காட்சிகளில் ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக இந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் இப்படத்தின் மீது மாபெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.