பிரபல  சின்னத்திரை நடிகை  வீட்டில்  கொள்ளை !

பிரபல சின்னத்திரை நடிகை லதாராவ். இவரது கணவர் ராஜ்கமல் .இவரும், சின்னத்திரை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு மதுரவாயல், கிருஷ்ணா நகரில்  பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டை அவர்கள் சினிமா மற்றும் டி.வி. படப்பிடிப்புக்கு, வாடகைக்கு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பூட்டி கிடந்த அந்த பங்களா வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதுகுறித்து ,நடிகை லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி.யை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ,மதுரவாயல்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து,கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். 

முன்னதாக,  அதே  பகுதியை சேர்ந்த  திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பிரமுகர் பொன்.பிரபாகரனின் கார்  திருடுபோனது  குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES

Recent News