காமெடி நடிகராக தனது பயணத்தை சினிமாவில் தொடங்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. பின்னர், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்து, ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

தற்போது, வேறு சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியின் பிறந்த நாளை யொட்டி, அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இது ஆர்.ஜே.பாலாஜியா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.