திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்தவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (வயது 27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. இதற்கிடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவிநாசியில் இருந்து காரை ஓட்டி வந்த ரிதன்யா மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள்ளேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த சேவூர் போலீஸார் ரிதன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்கொலை செய்து கொண்ட பெண் கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய ஆடியோ தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோ வெளியாகி உள்ளதுஅதில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் மாமனார் மாமியார் தன்னை சித்திரவதை செய்ததாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது என்றும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறி தந்தைக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் அப்பில் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் வாட்ஸ் ஆப் ஆடியோக்களை ஆதரங்களாக வைத்து., அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால் கவின்குமார் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்தார்.
அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னர் கவின்குமார் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டார்.
மேலும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் அவர்களது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்., தன்னுடைய மகளின் தற்கொலை தூண்டலுக்கு காரணமானவர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் படி புகார் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.