வெறும் மணிகள் மட்டும் தான்.. கிட்டதட்ட நிர்வாணமாக வந்த பெண் பாடகி.. Met Gala நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபோலிடன் கலை அருங்காட்சியகத்தில், வருடந்தோறும் நடத்தப்படும் பேஷன் நிகழ்ச்சி தான் மெட் காலா. பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடைகளை அணிந்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்து முடிந்நது. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டு சொல்லும்படி, வித்தியாசமாக ஆடை அணிந்தவர்கள் யார் என்று பின்நோக்கி யோசித்து பார்த்தால், அது பாடகி ரீடா தான். அப்படி என்னதான் ஆடை அணிந்திருந்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.

பிரபலமான பிரிட்டிஷ் பாடகிகளில் ஒருவராக இருப்பவர் ரீடா ஓரா. இவர் தனது கணவர் டைகா வைடிடி-யுடன், மெட் காலா 2024 நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதில், டைகா டைடிடி தோலில் செய்யப்பட்ட வித்தியாசமான கோர்ட் சூட்டை அணிந்திருந்தார்.

ஆனால், அதைவிட வித்தியாசமாக, ரீடா ஓரா, வெறும் மணிகளை மட்டும் தனது உடல் மீது, தொங்கவிட்டபடி, அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். மார்னி என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியிருந்த இந்த ஆடை, அங்கிருந்த பலராலும் கவரப்பட்டது.

இதற்கிடையே, Vogue என்ற நாளிதழுக்கு ரீடா ஓரா என்ற பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், தன்னுடைய ஆடை, பழங்காலத்துடன் தொடர்புடையது என்றும், அதில் உள்ள மணிகள், உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் விட பழமையானது என்றும் கூறியுள்ளார்.

மேலும், காலம் கடந்த அழகு என்ற மெட் காலாவின் Theme-க்கு ஏற்ற வகையில் இந்த ஆடையை அணிந்துள்ளேன் என்றும், அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மெட் காலாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ரீடா ஓரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு, பாசிட்டிவ்வான வகையிலும், நெகட்டிவ்வான வகையிலும், பல்வேறு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News