கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்நிலையில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ந் தேதிக்குள் வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.