பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம், சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன், ஜோடியாக வந்திருந்தார்.
விவாகரத்து வழக்கு இன்னும் முடியாமல் உள்ள நிலையில், இவர் பாடகியுடன் ஜோடியாக திருமண விழாவில் கலந்துக் கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது ஐசரி கணேஷின் மகளுடைய ரிசப்ஷன் நிகழ்ச்சியிலும், இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, இணையத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.