இன்று மாலை நடக்க இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் இன்று மாலை 7 மணி அளவில் நடக்க இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘30 years of Rahmania’ என ரஹ்மானைக் கொண்டாடும் விதமாக ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற இருந்தது. ஆனால், இன்று மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ரஹ்மான் கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டிக்கெட் புக் செய்த ரசிகர்கள் தங்களது ,வருத்தங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.