தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டபோது, சிறிய விபத்தில் சிக்கி, காயம் அடைந்துள்ளார். இதனால், தற்போது அவர் ஓய்வில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்களை, நடிகை ராஷி கண்ணா தனது இன்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும் என்றும், நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும் என்றும், அந்த பதிவிற்கு கேப்ஷன் வழங்கியுள்ளார்.