ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.
மேலும் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இலங்கை கடற்படையினர் வலைகளை வெட்டி கடலில் வீசியதால் படகு ஒன்றுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, இந்திய அரசு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.